Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/31/2017

வனிதா என்கிற மாணவி


வழக்கம் போல வகுப்பில் முதல் பீரியட், 
அட்டன்டன்ஸ் எடுத்துக்  கொண்டிருந்தேன். 
சாரு.. பிரசன்ட் சார்,
தீபா... பிரசன்ட் சார்,
ஜோதி... பிரசன்ட் சார், 
ரமேஷ்... பிரசன்ட் சார்,
வனிதா....
வனிதா...

சார் வனிதா இன்னைக்கு ஸ்கூல் க்கு ஆப்சென்ட் சார்.

ஒ, அப்படியா? ஜோதி, நீ வனிதாவுக்கு க்ளோஸ் பிரன்ட் தானே, வனிதா ஏன் ஒரு வாரமா ஸ்கூல் க்கு வரல? உன்கிட்ட எதுனா காரணம் சொன்னாளா?
இல்லை சார்.

ஒரு ஒழுக்கமான மாணவி, கிளாஸ் பஸ்ட் எடுக்குற பொண்ணு, தேவை இல்லாமல் லீவ் எடுக்காத பொண்ணு, இப்படி எக்ஸாம் நேரத்துல எதுக்கு லீவ் போடுறா? 
இப்படியான கேள்விகள் மனதுக்குள் நிழலாடியது. 

சரி இன்னைக்கு ஈவ்னிங் அவ வீட்டுக்கு போய் காரணம் என்னன்னு தெரிஞ்சிட்டு வரணும் ன்னு முடிவுபன்னி அன்றைய வகுப்பில் பிசியாகிப் போனேன்.

ஆனால் அன்று ஈவ்னிங் வனிதா வீட்டிற்கு வேறு வேலைகள் காரணமாக போகவில்லை. இல்லை மறந்துவிட்டேன்.

மறுநாள் வழக்கம் போல வகுப்புக்கு போனேன்.

இன்று வனிதா வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் மனதுக்கு நிம்மது ஆயிற்று. 
ஆனால் வழக்கமான வனிதா அங்கே மிஸ்ஸிங்.

ஒருவித பொலிவுடனும், சிரிப்பு முகத்துடன் காணப்படும் வனிதா, அன்று சோகமாக காணப்பட்டாள். காரணம் அறிய அவளை அழைத்து பேசினேன்.

வனிதா, ஏன் சோகமா இருக்க? ஒரு வாரம் லீவ் வேற போட்டுருக்க, உடம்பு ஏதாவது சரி இல்லையா? சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு? 
நான் வேற நம்ம எச் எம் கிட்டேயும், மற்ற ஆசிரியர்கள் கிட்டேயும், என்னுடைய வகுப்பு பொண்ணு வனிதா தான், இந்த வருடம் ஸ்கூல் பஸ்ட் வருவா ன்னு சபதம் வேற போட்டிருக்கேன். நீ வேற இப்ப அடிக்கடி லீவ் போடற, என்னை அசிங்கப் படுத்திடுவே போல இருக்கே? என்றவுடன், உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

சார் வீட்ல பிரச்சனை சார், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை சார் என்றாள். ஐயோ வனிதா எல்லார் வீட்டிலையும் பிரச்சனைகள் இருக்கு அதை ஏன் பெரிதுபடுத்துகிறாய் என்றேன்.

அந்த அழுகையும், விசும்பளும் அதிகம் ஆயிற்று. சார் எங்க அப்பாவைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும். பயங்கர சந்தேகப்பிராணி சார் அவர், 

சாப்பாடு உப்பு கம்மியா இருந்தா அடி, ருசியா இல்லையா உதை, 
எங்கம்மா அழகு, அதற்கேற்றமாதிரி டிரஸ் பண்ணா , என்னடி இது தெவிடியா மாதிரி அலங்காரம் ன்னு, வயதுக்கு வந்த பொண்ணு இருக்கேனேன்னு கூட பாக்காம என் முன்னாடியே திட்டுவார். 

சும்மா வெளிய வேடிக்கை பார்த்தா கூட , யாரை எதிபார்த்து நிக்கற ன்னு அசிங்கமா கேட்பாரு. இப்படிப்பட்ட அப்பா சார் எனக்கு, இருந்தாலும் எங்க அம்மாவிக்காக இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு நான் படிப்பில் கவனம் செலுத்துவேன். அது உங்களுக்கு தெரியும், என்று சொல்லி சில நிமிடம் பேச்சை நிறுத்தினாள், நான் உடைந்து போயிருந்தேன்.

ஆனால் போன வாரம் பிரச்சனை பெருசாயிடுச்சி, அதனால்தான் என்னால ஸ்கூல் க்கு வரமுடியல என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

சரி, போன வாரம் என்னதான் ஆச்சு சொல்லு என்றேன்.

போன வாரம் ஞாயிறு காலையில கறி சமைச்சு வெக்கல ன்னு எங்கப்பா அம்மாட்ட சண்டை போட்டு இருந்தாரு நானும் வழக்கமான சண்டை தானேன்னு, ரூம்குள்ள போய் படிச்சிட்டு இருந்தேன். அப்பா கொஞ்சநேரம் சண்டை போட்டுட்டு வெளியில எங்கோ கிளம்பி போயிட்டாரு. அன்னைக்கு மதியமும் வீட்டுக்கு வரல, நைட்டும் ஒன்பது மணி வரைக்கும் வரல, சரி நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டு படுத்துடோம்.

காலையில எழுந்து பார்த்தா எங்கம்மா முக்காடு போட்டுட்டு அழுதுட்டு இருந்தாங்க. என்னம்மா, என்னாச்சு நைட்டு, ஏம்மா அழறன்னு, கேட்டவுடன், அம்மா அந்த முக்காடு எடுத்தாங்க, பார்த்தவுடன் நான் மயங்கி விழுந்துட்டேன் சார் என்றாள்.

எனக்கு ஒன்னும் புரியல, என்னாச்சு என்றேன். 
சார் எங்கப்பா அன்னைக்கு குடிச்சிட்டு வந்து, எங்கம்மா கூந்தல் முடியை வெட்டிட்டாரு. அன்னைக்கு அரைகுறை முடியோக எங்கம்மா அழுத அழுகை இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீருக்கு பதிலா ரத்தம் வருது என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

கண்ணீர் வழித்தொடியது வனிதாவிற்கு... 
கலங்கிப்போய் நின்றிருந்தேன் நான்...


6 comments:

 1. மனசுக்கு கஷ்டமா போச்சு ..இந்த பெற்றோரால் பாவம் பிள்ளைகளுக்கு எத்தனை மன வேதனை ..
  இங்கே ஒரு நண்பர் சொல்வார் பணம் இல்லைனா கூட பரவாயில்லை வீட்டில் சந்தோஷமுடன் வளரும் பிள்ளை வாழ்க்கையில் படிப்பில் நன்கு சாதிக்கும் ..

  இப்படி கெட்ட வார்த்தைகள் ,சண்டை சச்சரவுகளை பார்த்து வளரும் குழந்தைகள் நிலை பரிதாபத்துக்குரியது..


  மீண்டும் வலைப்பக்கம் சந்திப்பதில் மகிழ்ச்சி கருண் ..

  ReplyDelete
 2. oரு “சொல்வதெல்லாம் உண்மை” எபிசோட் பார்த்ததுபோல் இருக்கு எனக்கு:(.

  ReplyDelete
 3. என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம்.... அவரது செயல் பெண்ணை எவ்வளவு பாதிக்கும் என்பது தெரியாத மூடனாக இருப்பது நல்லதல்ல.... :(

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"