புதிய இந்தியா - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/07/2017

புதிய இந்தியா

ஓர் அரசின் தலைமை செயலாளர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் என பலர் வருமான வரி சோதனை உள்ளாவது அநேகமாக தமிழகத்தில் தான் என நினைக்கிறேன்.

 ஒரு பக்கம் தமிழக கஜானா காலி, மறுபக்கம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விளக்கம் கேட்கிறது வருமானவரி துறை.

 கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்பை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து தான் துவக்க வேண்டும் மக்களிடம் இருந்து அல்ல என்பதையே இந்த சோதனைகள் உணர்த்துகின்றது.

அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழல்கள் தான் இவர்களிடம் பணம் புழங்க காரணம்., கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என சாதாரண மக்களை தெருவில் நிற்க வைத்த மத்திய அரசு, நாடெங்கும் மத்திய மாநில அரசுகளின் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களை தடுக்க வேண்டும். 

லட்சம் கோடி மதிப்புடைய அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழலை தடுத்தால் மட்டுமே , புதிய இந்தியா உருவாகும்.

4 comments:

 1. என்ன நடக்கிறது என்பது புரிவதில்லை - இதிலும் அரசியல் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 2. நீங்கள் சொன்னது நடப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்...

  ReplyDelete
 3. கடைசியில் சொல்லியிருப்பது நடக்கும் என்றா நினைக்கிறீர்கள்...
  சாத்தியமே இல்லை....

  ReplyDelete
 4. பிடுங்கியவர் போய் மற்றவர் வந்து வரும் பிடுங்குகிறாரே!! என்ன செய்வது

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot