10 வகுப்பு தனி தேர்வர்களுக்கு நாளை முதல் 'ஹால் டிக்கெட்'. - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

2/14/2018

10 வகுப்பு தனி தேர்வர்களுக்கு நாளை முதல் 'ஹால் டிக்கெட்'.




தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தத்கல் உட்பட, ஆன்லைனில் விண்ணப்பித்த, தனித்தேர்வர்களுக்கு, நாளை, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. 

தேர்வர்கள், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

 செய்முறை தேர்வு குறித்த விபரத்தை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot