+2 இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/15/2018

+2 இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி?

How to get centum in physics:

 

யற்பியல் பாடத்தை, 'ஐயோ பிராப்ளமே' என பயப்படாமல், அதுவும் நம் சப்ஜெக்டில் ஒன்றுதான், நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சப்ஜெக்ட்தான் என்ற நினைப்புடன் அதனுடன் ஃப்ரெண்டாகிவிட்டால், இயற்பியலிலும் ஈஸியா ஜெயிக்கலாம்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுக்க இதோ சில ஈஸி டிப்ஸ்.

1. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வால்யூமிலும் சேர்த்து 10 சேப்டர்கள்தாம் இருக்கின்றன. இதில், இரண்டாம் மற்றும் ஏழாவது யூனிட்களை முழுமையாகப் படித்துவிடுங்கள். இதிலிருந்து 20 மதிப்பெண் கேள்விகள் வந்துவிடும்.

2. அடுத்து, 1, 2, 4, 7, 8 ஆகிய சேப்டர்களை ஆழமாகப் படியுங்கள். இந்த ஐந்து யூனிட்டிலிருந்து 100 மதிப்பெண் பெற்றுவிடலாம்.

3. எட்டாவது சேப்டரில் 10 மதிப்பெண் கேள்விகள் நான்கு இருக்கின்றன. இவற்றைப் படிக்க மறந்துவிடாதீர்கள். நான்கில் ஒன்று நிச்சயம் வரும்.

4. நாலாவது சேப்டரில், சுருளின் திசையளவை மாற்றுவதன் மூலம் எவ்வாறு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது, ஒரு கட்ட ஏ.சி. மின்மாற்றி, சுழல் மின்னோட்டம் மற்றும் பயன்கள், மின்மாற்றி ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளை பிராக்டீஸ் செய்யுங்கள். ஐந்தாவது சேப்டரில் வெளியீடு, உட்கவர் நிறமாலை, பட்டை அகத்துக்கான சமன்பாடு, முழு அக எதிரொளிப்பு, ராமன் விளைவு ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளைப் படியுங்கள். ஆறாவது சேப்டரில்... லேசர் பற்றிய கேள்விகள், ஜே.ஜே. தாம்சன் சோதனை, எண்ணாவது வட்டப்பாதை, ஆரத்துக்கான சமன்பாடு ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளையும் பிராக்டீஸ் செய்யுங்கள்.

5. இரண்டாவது வால்யூம் சிரமமாகவே இருக்காது. இந்த வால்யூமில் ஒன்பதாவது சேப்டரில் இருக்கும் மூன்று மதிப்பெண் கேள்விகள் மொத்தத்தையும் படித்துவிடுங்கள். எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் படிக்கப்போகிற மாணவர்கள் ஒன்பதாவது சேப்டரை முழுதாகப் படியுங்கள். தவிர, மற்ற சேப்டர்களில் வரும் டயகிராம்களுக்கு இரண்டு மதிப்பெண் என்றால், ஒன்பதாவது சேப்டரில் வரும் டயகிராம்களுக்கு 4 அல்லது 5 மதிப்பெண்கூட தருவோம். அந்தளவுக்கு அது முக்கியமான சேப்டர்.

6. டயகிராம்களில் பெரும்பாலும் சர்க்கியூட் சம்பந்தப்பட்டவற்றையே கேட்பார்கள்.

7. 5 மதிப்பெண் கேள்வி பதில்களில் 'கம்பல்சரி பிராப்ளம்ஸ்' வரும். இதில், சால்வ்டு எக்ஸர்சைஸ் அல்லது எக்ஸர்சைஸ் பிராப்ளம்களை மட்டும் பிராக்டீஸ் செய்தால் போதும்.

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot