கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/19/2018

கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா?

பிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள்.வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அதிகம் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.

உடல் பருமன் உள்ளவர்கள் உடலைக் குறைக்க விரும்பினால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறையும்.

வேர்க்கடலையை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வருவதன் மூலம், இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட், ஒலீக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகின்றது.

பற்கள் பலம் பெற வேர்க்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

தினந்தோறும் பெண்கள் 400 கிராம் என்ற அளவில் வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை வேர்க்கடலையில் அதிகம் உள்ளன.

பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டியை தடுப்பதில் வேர்க்கடலை முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான சத்துகள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடுவதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. மேலும், இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவாக உள்ளது.

பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க தினந்தோறும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) என்ற அளவில் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot