நம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/22/2018

நம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்?

இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.


இப்படி ஒரு சூழலை நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவரோ மனைவியோ வெளியூர் சென்றுள்ளார், அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார், நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.

மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுபவேண்டும் என்று சொல்லுங்கள்.
விண்ணப்பத்தில், பெறுனர் அனுப்புனர் விபரம் மற்றும் அனுபவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.

வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS  செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.

உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்னை கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.

ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம்
Western Union Money Trasfer  இது போல தானே உனு நீங்கள் கேட்கலாம், ஆனால் Western Union கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல்துறை அலுவலகம் உள்ளது

இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.
Source: Whatapp

1 comment:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot