நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..! - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/23/2018

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.

அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள், நானும் ரேஷன் எடுக்கவே போயிருந்தேன்..!
--> ஒற்றுமை நெம்பர் 01
.
நான் அவளை ரெண்டாவது தடவை பார்த்த போது
அவளும் சாமி கும்பிட வந்திருந்தாள், நானும் சாமி கும்பிடவே போயிருந்தேன்..!?
--> ஒற்றுமை நெம்பர் 02
.
மூன்றாவது தடவை அவளை நான் பார்த்தது லைப்ரெரியில்..! நான் புக் எடுக்க போயிருந்தேன்..!
என்ன ஆச்சரியம்.?
அவளும் புக் எடுக்கவே வந்திருந்தாள்.!
--> ஒற்றுமை நெம்பர் 03
.
இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங்க் என எங்கும்,
நான் எதற்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்..!
.
எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை கண்டு நானும் ஆச்சரியப்பட்டேன்..! அவளும் ஆச்சரியப்பட்டாள்..!
.
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாமே என்று எண்ணினேன் -
அவளுக்கும் தோணிச்சுது..!!
.
அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு நான் நினைத்தேன்..!
அவளும் 'அவராக வந்து காதலை சொல்லட்டும்'
என நினைத்துவிட்டாள்..!
.
இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு..!
.
ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய்
"மாலினி ஐ லவ் யூ" என்றேன்...!
.
அதுக்கு அவள்..,
"என் பேரு ஜீவமாலினி..! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா.?
அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா.? "
என்று மொக்கை போட்டாள்..!
.
அதை நான் தாங்கிகிட்டேன்..!
(எல்லாம் சுயநலம் தான்)
.
ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள்.!
.
நான் வெட்டியாக இருந்ததை வெளிப்படையாகவே சொன்னேன்...!!
.
அவள் : "அக்கா தங்கச்சி or அண்ணண் தம்பி?"
.
நான் : "ஒரு அண்ணண்"
.
அவள் : அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா.? "
.
நான் : "இன்னும் இல்லை"
.
"ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன்"
அவள் கிளம்பிவிட்டாள்..!
.
எனக்கோ ரெண்டு மாசம்கிறது ரெண்டு வருஷம் மாதிரி இருந்தது..!!
ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியுடன் பார்க்க வந்தாள்..!
.
இந்தக்கதையின்
தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது..!
.
காரணம்,
.
..
.
.
.
.
.
.
..
.
.
.
.
நான் படிச்ச பேப்பர் துண்டுல இவ்வளவு தான் இருந்திச்சு..!
.
பின்ன ஐம்பது பைசாவுக்கு சுண்டல் வாங்கினா முழுப்பேப்பரா தருவாங்க......?!
இத்துனூண்டு சின்னதா தானே தருவாங்க...!!
.
நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க....!!
.
# என்ன நான் சொல்றது..?

Source : Whatsapp

1 comment:

  1. ஓரு குட் நியூஸ்! உங்க அண்ணன் என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டார்!! நான் இனி மேல் உன் அண்ணி என்றாள் !!! இது தானே முடிவு ?? Nakeeran

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot